1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain warning to five districts

5 மாவட்டங்களில் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கனமழை: வானிலை மையம் தகவல்

கனமழை
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு மணி நேரங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நேத்துதான் தமிழ் கத்துக்க தொடங்கினேன்! – சென்னை புதிய தலைமை நீதிபதி!