வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
தைப்பூசத்தை முன்னிட்டு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூரில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேல்மருவத்தூருக்கு பிற்பகல் 3.08 மணிக்கு வரும் ரயில் 3.10 மணி வரை நிற்கும் என்றும் மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு சில ரயில்கள் மேல் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் நிலையில் தற்போது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்லும் என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Edited by Mahendran