தென்கொரியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 120ஆக உயர்வு: அதிர்ச்சி தகவல்..!
தென்கொரியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் முதல் கட்டமாக 38 பேர் பலியானதாக செய்திகள் வெளியானது. தற்போது, பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களுடன் தென்கொரியாவுக்கு சென்றது. முவான் என்ற விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து திடீரென விலகி, சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான அடுத்த நொடியே, விமானம் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விமானத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் 38 பயணிகள் பலியானதாக ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கப்பட்டன. தற்போது, தென் கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் 120 பேர் பலியாகியுள்ளதாக உறுதி செய்துள்ளது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran