செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (16:58 IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மழை மேலும் வலுக்கும் என தகவல்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
அரபிக்கடலில் உருவான இந்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக தேனி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஒருசில குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் தாழ்வுப்பகுதியால் மேலும் மழை வலுக்கும் என்ற தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மழை வேண்டி பிரார்த்தனை செய்த பொதுமக்கள் தற்போது மழை போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதுதான் இயற்கையின் விதி என்பது குறிப்பிடத்தக்கது