1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (07:36 IST)

தென்மாவட்டங்களில் தொடர்மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

rain
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் வழக்கத்தை விட 3 டிகிரி அதிகமாக சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது