வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (15:35 IST)

அடுத்த 1 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

rain red umbrella
19 மாவட்டங்களில் அடுத்த மணி  நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என தற்போது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி  நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், அடுத்த 48 மணி   நேரத்தில் வலுப்பெறும் என சென்னை ஆய்வு மண்டல தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், 19 மாவட்டங்களில் அடுத்த மணி  நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என தற்போது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டிய, வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய  19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.