1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வியாழன், 25 மே 2023 (17:05 IST)

தியேட்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க மறுப்பு... இளைஞர் வாக்குவாதம்

chennai
சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த ஊழியரிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை  ஒழிக்கும் நடவடிக்கையாக,  பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் சமீபத்தில், திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நிலையில், மக்கள் தங்களிடம்  உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர்.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து  அல்லது பேங்கில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த  நிலையில்,  சென்னை மதுரவாயிலில் உள்ள பிரபல தியேட்டரில் இன்று பிச்சைக்காரன்-2 படத்தின் டிக்கெட் பெற  போரூரைச் சேர்ந்த கோதண்டராமன் என்ற இளைஞர் தன்  நண்பருடன் சென்றிருந்தார். அப்போது,  2 ஆயிரம் ரூபாய் நோட்டை வழங்கியுள்ளார். இதை கவுன்டரில் இருந்த ஊழியர் வாங்க மறுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து,  ஊழியருக்கும் இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.