வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (11:05 IST)

சென்னையின் பல பகுதிகளில் கனமழை.. ட்விட்டரில் டிரெண்டாகும் #HeavyRain ஹேஷ்டேக்..!

சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  
 
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், எழும்பூர், சென்ட்ரல் ,ஆழ்வார்பேட்டை, திநகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலை ஓரம் மழை நீர் தங்கி உள்ள நிலையில் உடனுக்குடன் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளனர்  
 
சென்னை மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளியில் சென்று உள்ளனர்.  
 
மேலும் சென்னையில் மழை காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.  ஏற்கனவே தீபாவளிக்கு விடுமுறைக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னை திரும்பி உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மழை காரணமாக #HeavyRain, #ChennaiRains, #TNRains ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.
 
Edited by Mahendran