வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூன் 2024 (13:45 IST)

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம்

Chennai Rain
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தாலும் கோடை காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் வெயில் கொளுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து தட்பவெப்ப நிலை குளிர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
நேற்று மாலை திடீரென சென்னையில் மழை பெய்தது என்பதும் இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும் மாவட்டங்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த மாவட்டங்களில் பெயர்கள் இதோ:
 
கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை
 
Edited by Siva