1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (07:02 IST)

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. இன்றும் சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Chennai Rain
சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், எனவே அந்த மகிழ்ச்சி சோகமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னை அருகே உள்ள தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து அங்கு கனமழை பெய்து வரும் நிலையில் அதன் தாக்கம் தமிழகத்திலும் இருப்பதால்தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva