1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain at Kanniyakumari: Dried People enjoyed

குமரியில் இடியுடன் கூடிய கனமழை: வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ச்சி

கனமழை
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சுற்று வட்டாரப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததுள்ளதால் வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


 
 
தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்கும் முன்பே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
 
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளே கனமழை பெய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வெயில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தப்பட்சமாக 29 டிகிரியும் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளித்த இன்ஸ்டாகிராம்