புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (19:32 IST)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்: கூடுதல் பாதுகாப்பு!

egmore
தமிழகத்தில் நான்கு நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து சொந்த ஊர் செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
நாளை தமிழ் புத்தாண்டு, நாளை மறுநாள் புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
இதன் காரணமாக சென்னையில் உள்ள தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள் ரயில்கள் மற்றும் மனங்களில் செல்ல தொடங்கியுள்ளனர் 
 
இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சொந்த ஊர் செல்ல பயணிகள் அதிக அளவில் கூடியதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும் முன்பதிவில்லாத போட்டிகளுக்கான டிக்கெட் வாங்க பயணிகள் குவிந்து உள்ளதால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது