1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:39 IST)

மே 2, 3 தேதிகளில் வெப்ப அலை வீசும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகி வரும் நிலையில் மே 2, 3 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் மே 2, 3 தேதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என எட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களில் பிற்பகலில் 30% முதல் 50 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Siva