திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:12 IST)

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதேபோல் நாளை முதல் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவண்ணாமலை, வந்தவாசி, சேலம், ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva