புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (00:17 IST)

அரசே குவாரிகளை ஏற்று நடத்த வேண்டுமென்றும்- முகிலன்

கிரானைட் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை முதலில் தடுத்து பின்னர் புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்குங்கள் என்றும்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல, கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும் கரூர் அருகே நடைபெற்ற புதிய கல்குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரிகளின் அனுமதிக்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கார சாரவிவாதங்கள் மற்றும் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று ஒரே நாளில் இரண்டு தாலுக்காக்களில் இரண்டு கல்குவாரிகள் துவக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி ! தொடர்ந்து மூன்று தினங்களில் 7 கல்குவாரிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு நிகழ்ச்சி – அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளினால் மக்களின் வாழ்வாதாரத்தினை காப்பாற்ற திமுக தலைவர் தேர்தல் பரப்புரையில் கூறியது போல, அரசே கல்குவாரிகளை ஏற்று நடத்த கோரிக்கை – கரூர் மாவட்ட்த்தில் மட்டும் கிரானைட் குவாரிகளில் மட்டும் ரூ 70 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், மொத்தமாக சுமார் 400 கல்குவாரிகளில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு/
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பழையஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வீரியம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் பலவண்ண கிரானைட் சுரங்கம் அமைப்பதற்கான கருத்து கேட்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலிகான் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடேஸ்வரன் ஆகிய அதிகாரிகளும் மக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சாமானிய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜயன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாட்டாளர் கண்ணன், லா பவுண்டேஷன் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் ஆகியோர் இங்கு அமைய உள்ள பலவண்ண கிரானைட் சுரங்கம் அமைக்க கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஏனென்றால், விளைநிலங்களின் அருகே இந்த சுரங்கம் அமைய உள்ளதாகவும், குடிநீர் பஞ்சம் கடுமையாக நிலவும் என்றும் கருத்து தெரிவித்த்தோடு, கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் சுமார் 400 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் எந்த ஒரு அரசு விதியையும் பின்பற்ற வில்லை என்றும், ஆகவே இரவு நேரங்களில் கூட இயங்குவதாகவும் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து குளித்தலை அடுத்த தோகைமலையில் நடைபெற்ற ஊத்துப்பட்டி பகுதியில் புதிதாக அமைய உள்ள, புதிய கல்குவாரிக்கான பொதுமக்களின் கருத்து கேட்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், இங்கே அமைய உள்ள கல்குவாரியானது, பட்டா நிலத்தில் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்தம் அடிப்படையில் என்று, பவர்பாயிண்ட் பிரசண்டேஷனில் காண்பிக்கப்படுவது முற்றிலும் நம்பகத்தன்மை இல்லாததை ஏற்படுத்துகின்றது. ஆகையால் முறையான அனுமதி கிடைப்பதற்கு முன்னர், ஏற்கனவே அனுமதி கொடுத்த கிரானைட் மற்றும் கல்குவாரிகள் முழுமையான அரசு விதிகளை கடைபிடித்தால் மட்டுமே புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்றும், இயற்கை சூழல் மாசுபடுவதற்கும், குடிநீர் பஞ்சம் ஏற்படாத வண்ணம் இப்பகுதி பொதுமக்களை அழைத்து அவர்களிடம் கருத்துகள் கேட்க வேண்டுமென்றும் முகிலன் கேட்டுக் கொண்டார். மேலும், கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கிரானைட் பேக்டரி மற்றும் கல்குவாரிகள் ஏழு இடங்களில் நடத்த அனுமதிக்காக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அந்தந்த பகுதி மக்கள் கலந்து கொள்ளவில்லை, ஆகையால் முறையான அனுமதி கிடைக்க கூடாது என்றும், மீண்டும் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த பகுதி மக்களை கொண்டு ஆங்காங்கே சம்பந்தப்பட்ட ஊரில் இந்த கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்றும், மீண்டும், இதுபோல சம்பவங்கள் நடைபெறும் போது, அதே முறைகேடுகள் தொடரும், ஏற்கனவே கிரானைட் குவாரிகள் மூலம் சுமார் 75 ஆயிரம் கோடி முறைகேடு கரூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 400 க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் மட்டும் 1 லட்சம் ரூபாய் கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆகவே முறைகேடுகள் தொடர்ந்தால் மக்களுக்கான வருவாய் முற்றிலும் போய் விடும், ஆகவே அரசே இந்த குவாரிகளை ஏற்று நடத்த வேண்டுமென்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கேட்டுக் கொண்டார்.