வியாழன், 30 நவம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (15:08 IST)

பெரும்பான்மை இடங்களில் முன்னிலை; ட்ரெண்டாகும் #முகஸ்டாலின்எனும்நான்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பல இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் ட்விட்டரில் #முகஸ்டாலின்எனும்நான் என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் திமுக பல தொகுதிகளில் முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெற்றி பெற்றவர்கள் விவரங்களும் வெளியாக தொடங்கியுள்ளது.

ஏறத்தாழ திமுக வெற்றி உறுதியான நிலையில் பலர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக வெற்றி உறுதியானதால் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று அர்த்தப்படுத்தும் விதமாக #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.