வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (14:52 IST)

வாக்கு எண்ணும் மையங்களில் உஷாராக இருங்கள்! – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும்பாமை பெற்றுள்ள நிலையில் திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் திமுக பல தொகுதிகளில் முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெற்றி பெற்றவர்கள் விவரங்களும் வெளியாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். கொரோனா காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.