1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. h5n1 virous found in dead crows in chennai

காகங்கள் இறப்பு!.. சென்னையில் பரவும் H5N1 வைரஸ்!. பறவைக் காய்ச்சல் பரவுமா?!..

crow
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காகங்கள் அதிக அளவில் உயிரிழந்த வந்தது. அதிகாரிகள் அதை சோதனை செய்ததில் காக்கையின் உடல்களில் வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்து கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. அந்த பறவைகளை கையால் தொடக்கூடாது எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அதே நேரம் இந்த பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை.. அதேநேரம் கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் உயிரிழந்த காங்களின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கால்நடைத்துறை அறிவித்திருக்கிறது.. மேலும் பறவைகள் இறந்த பகுதிகளில் கிரிமி நாசினி தெளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்திய ஐடி துறையின் அஸ்திவாரத்தையே மாற்றப்போகும் ஒரு எச்சரிக்கை மணி. சுதாரிக்க வேண்டிய காலம்..!