ஞாயிறு, 15 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 பிப்ரவரி 2026 (07:46 IST)

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு கோடியை தாண்டிய புற்றுநோய்.. சென்னையில் தான் மிக அதிகம்..

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு கோடியை தாண்டிய புற்றுநோய்.. சென்னையில் தான் மிக அதிகம்..
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என்று சுகாதார துறையின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
 
மாவட்ட ரீதியாக பார்க்கும்போது, தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 7,295 பேரும், வேலூரில் 6,525 பேரும் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலின அடிப்படையில், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. ஆண்களை பொறுத்தவரை, புகையிலை பயன்பாடு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் வாய் மற்றும் வயிற்று புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
 
தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதால், மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயகரமான சூழலை கருத்தில் கொண்டு, ஆரம்பக்கட்ட பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Edited by Siva