ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (18:50 IST)

ஜெய்பீம் படத்திற்கு ஹெச்.ராஜா பதிவு செய்த டுவிட்!

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தை விமர்சகர்கள் பத்திரிகையாளர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை ஒரு சில பாஜக ஆதரவாளர்கள் மற்றும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்தது அந்த வகையில் பாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் ஸ்டில் ஒன்றை பதிவு செய்து கூறியிருப்பதாவது: நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம். என்று பதிவு செய்திருந்தார்.
 
ஜெய் பீம் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த நடிகர் சூர்யா லைக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது