புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (16:03 IST)

நீங்கள் வகுத்த பாதை…கமலுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் நல்ல வரவேற்பை பெற்று டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், #JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் எனத் தெரிவித்தார்.

இதற்கு சூர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி! எனத் தெரிவித்துள்ளார்.