புளி பழுப்பது சாம்பாருக்குதான் – ஸ்டாலினை கலாய்த்த எச்.ராஜா

Last Updated: திங்கள், 1 ஜூலை 2019 (09:29 IST)
பழைய கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சி போல ஒரு சம்பவத்தை ட்விட்டரில் அரங்கேற்றியுள்ளார் எச்.ராஜா.

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றாதது குறித்து ”புலி பதுங்குவது பாய்வதற்காகதான்” என ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசினார். ஸ்டாலின் எதையாவது பேசினால் உடனே அதற்கு எதிர்வினையாக ஏதாவது பதில் சொல்வதில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மற்றொருவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை “முக ஸ்டாலின் புலியா? அல்லது பூனையா? என்பதை நினைத்தால் கவலையாக உள்ளது என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இதுனால் வரை ஜோசப் விஜயோடு மல்லுக்கட்டி கொண்டிருந்த எச்.ராஜா சற்றே விலகி இந்த முறை ஸ்டாலின் பக்கம் வந்திருக்கிறார்.

ஸ்டாலினின் பேச்சை கலாய்க்கும் வகையில் “புளி பழுப்பது சாம்பாருக்குதான்” என்று ட்வீட் போட்டிருக்கிறார். இதனால் கடுப்பான திமுகவினர் சிலர் கமெண்டுகளில் “பால் புளிப்பது தயிர்சாதத்துக்குதான்”, “அதை ஒரு கொட்டை எடுத்த புளி சொல்கிறது” என கலாய்த்திருக்கிறார்கள்.இதில் மேலும் படிக்கவும் :