வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:39 IST)

தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்: எச்ராஜா திடீர் அறிவிப்பு

H Raja
தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக பாஜக முக்கிய தலைவர்கள் எச் ராஜா திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சிவகங்கையில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தேர்தல் அரசியலில் இருந்து தான் விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் சிவகங்கை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும் என்றும் கூறினார். 
 
மேலும் இப்பொழுது முதலே தேர்தல் பணியை தொடங்க வேண்டும் என்றும் தேர்தல் பணியை தொடங்கப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். உலகில் 23 ஆண்டுகள் தொடர்ந்து நிர்வாகத்தை ஆட்சி செய்யும் ஒரே தலைவர் மோடி தான் என்றும் அவரது சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வேன் என்றும் தெரிவித்தார். 
 
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து நல்ல எண்ணிக்கையில் பாஜகவுக்கு எம்பிகள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
 
 
Edited by Siva