1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja says about admk leaders speech

பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் பேசினால் மட்டுமே பதில் கூறுவேன்,: எச் ராஜா

H Raja
பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசினால் மட்டுமே பதில் கூறுவேன் என்றும் மற்றவர்கள் விமர்சனம் செய்தால் நான் பதில் கூற மாட்டேன் என்றும்  எச். ராஜா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மீண்டும் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பதும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதற்கு, ‘அரசியல் விஞ்ஞானிகளுக்கு பதில் சொல்ல முடியாது என அண்ணாமலை பதிலடி கொடுத்தார். 
 
இந்த நிலையில் ஜெயக்குமார் உள்பட பல அதிமுக தலைவர்கள் பாஜக குறித்து விமர்சனம் செய்து வரும் நிலையில் எச் ராஜா இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். எடப்பாடி பழனிச்சாமி பேசினால் மட்டுமே பதில் கூறுவேன் மற்றவர்கள் விமர்சித்தால் நான் பதில் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாஜகவுக்கு ஓட்டு முக்கியமே தவிர மனிதர்கள் முக்கியமல்ல- ம.நீ,ம பொதுச்செயலாளர் அருணாச்சலம்