எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தரின் அராஜகம் (வீடியோ இணைப்பு)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் பத்திரிகையாளர் ஒருவரின் கேமராவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் மீது ஊழல் வழக்கு ஒன்று உள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை பெற இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு வந்தார் எச்.சுந்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளரையும், அவரது கேமராவையும் அவர் தாக்க முயன்றார்.
அப்போது அந்த பத்திரிக்கையாளர் அதற்கு எதிர்வினையாற்றி அவரை பிடித்து கேமராவில் படம் பிடிக்க முயன்றார். இதனையடுத்து அவரது கையை தட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து அவசர அவசரமாக எச்.சுந்தர் வெளியேறும் காட்சிகள் வீடியோவாக வைரலாக பரவி வருகிறது.