பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா: உயர் நீதிமன்றம் உத்தரவு
பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா பயன்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஆறுமுகம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதிவிக்கான தேர்தல் வருகிற மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுபவர்களுக்கு ஓட்டுப்போட விரும்பாத நபர்கள் யாருக்கும் விருப்பமில்லை என்று பதிவு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
சட்டமன்ற, பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் நோட்டா உள்ளது. அதுபோல பார் கவுன்சில் தேர்தலிலும் நோட்டா வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் சிறப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்சில் கவுன்சில் தேர்தலில் நோட்டா வாய்ப்பை வழங்குவது குறித்து சிறப்புக் குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.