1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (16:44 IST)

புதைக்கப்பட்ட குழந்தை: 6 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு!

மொண்டானாவின் லொலோ ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் மரம் நபர் ஒருவர் 5 மாத கைக்குழந்தையுடன் வித்தியாசமாக சுற்றி திரிவதாக போலீஸாருக்கு அந்த பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். 
 
இந்த புகாரையடுத்து போலீஸார் அங்கு விரைந்த போது, அந்த மர்ம நபர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், பொதுமக்களை மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அந்த நபர் அதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற போது அவர் கையில் குழந்தை இல்லை எனவும் அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். 
 
அதன் பின்னர் போலீசார் அவரை தேடி கைது செய்தனர். அவர் முழு போதையில் இருந்த காரணத்தால், குழந்தை எங்கே என்று தெரியாது என கூறிவிட்ட நிலையில், அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் மலைப்பகுதியில் குழந்தையை புதைத்தாக கூறியுள்ளார். 
 
பின்னர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் குழந்தையில் அழுகுரலை வைத்து 6 மணி நேர தேடலுக்கு பிறகு குழந்தையை காப்பாற்றினர். குழந்தை சிறு காயத்துடன் உயிருடன் இருந்தது. 
 
அந்த மர்ம நபரின் பெயர் பிரான்சிஸ் கார்ல்டன் என தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.