1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (12:15 IST)

ஈவெரா ஒரு ஒழுங்கங்கெட்ட தீய மனிதன்.. புத்தகத்தில் இருந்ததை படித்து காட்டிய எச். ராஜா..!

H Raja
ஈவேரா ஒரு ஒழுக்கம் கெட்ட தீய மனிதன் என்பதை பத்திரிகையாளர்கள் முன் பெரியாரின் சீடர் சாமி சிதம்பரம் எழுதிய புத்தகத்தில் இருந்ததை பாஜக மூத்த தலைவர் எச் ராஜா படித்துக் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஈவேரா பற்றி சாமி சிதம்பரம் அவர்கள் எழுதிய புத்தகத்தில்  ’ஈவேரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களில் இருந்து தான் புறப்படுவார்.  விழா காலங்களில் ஈவேராவின் கூட்டாளிகள் விலைமாதுகள் கூட்டத்துடன் காவிரி ஆற்றில் மணல் பகுதிகளுக்கு செல்வார்கள். இரவு முழுவதும் ஆற்று மணலில் கூத்தடிப்பார்கள்.  இதற்கு வீட்டில் இருந்தே சமையல் சமைத்துக் கொண்டு போக வேண்டும் அதுவும் அவருடைய மனைவியே சமைத்து கொண்டு வரச் சொல்வார்  என்று படித்துக் காட்டி எச் ராஜா ’இவை எதுவுமே என்னுடைய வார்த்தை இல்லை, சாமி சிதம்பரம் அவர்கள் எழுதிய புத்தகத்தில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். 
 
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எச் ராஜாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva