1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:06 IST)

டாடா, அம்பானியின் பங்களிப்பு இதோ, சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன? ஹெச்.ராஜா கேள்வி

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு டாடா மற்றும் அம்பானி நிறுவனங்கள் உதவி செய்து கொண்டிருக்கும் நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?? என்று ஹெச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நாள்தோறும் 700 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது 
 
அதே போல் டாட்டா குழுமம் தினமும் 200 முதல் 300 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தினமும் 400 டன் ஆக்சிஜனை இலவசமாக JSW  நிறுவனம் தந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன என்ற கேள்வியை ஹெச் ராஜா எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அம்பானி குழுமம் நாள்தோறும் 700 டன் ஆக்ஸிஜன்,  டாடா குழுமம் தினமும் 200-300 டன், JSW தினமும் 400 டன் ஆக்ஸிஜன் இலவசமாகத் தருகிறது. சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?