செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:04 IST)

எம் எஸ் பாஸ்கர் மகள் திருமணம்… திரையுலகினர் கலந்துகொண்டு வாழ்த்து!

திரை நட்சத்திரம் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பின்னணிக் குரல் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த எம் எஸ் பாஸ்கர் பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்றார். இப்போது திரையுலகின் முன்னணிக் கலைஞராக இருக்கும் பாஸ்கரின் மகன் ஆதித்யா 96 படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.