வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (16:14 IST)

கர்நாடக அமைச்சர் மும்பையில் கைது ! அரசியலில் பரபரப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் இரு கட்சிகளையும் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
இந்த ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எம்.எல்.ஏ-க்கள் பாஜகவின் பாதுகாப்புடன் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். இந்த எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் மற்றும் மஜத-வை சேர்ந்த எவரையும் சமரசம் பேச சந்திக்க விருப்பமில்லை எனவும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸாரிடம் கேட்டுள்ளனர். 
 
இந்நிலையில் சித்தராமையா எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், சமரசத்திற்கு உடன்படாவிட்டால், கட்சி தாவல் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். மேலும் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். 6 ஆண்டுகள் அவர்கள் எம்எல்ஏ பதவியில் போட்டியிட முடியாத நிலையையும் உருவாகும் என எச்சரித்துள்ளார். 
 
சித்தராமையாவின் இந்த எச்சரிக்கைக்கு ராஜினாமா கடிதம் வழங்கிய எம்.எல்.ஏ-க்கள் பணிவார்களா அல்லது கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழுமா என்பது பரபரப்பான அரசியல் சூழ்நிலையை அங்கு உருவாக்கியுள்ளது. 
 
இந்நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்க்காக அம்மாநில அமைச்சர் சிவக்குமார் இன்று மும்பை சென்றிருந்தார். ஆனால் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த  நிலையில், அமைச்சர்  சிவக்குமார் ஹோட்டல் முன்பு அமர்ந்தார். அதனால் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.