1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H.Raja delete his contraversy tweet

இன்று லெனின் சிலை, நாளை பெரியார் சிலை: திடீரென மாயமான எச்.ராஜா டுவீட்

h.raja
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும் தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டரில் அவர் , ' 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்தார். 
 
இந்த பதிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக பெரியாரின் சிலை குறித்து அவர் கூறியதற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சி தொண்டர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எச்.ராஜா, உடனே அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் அந்த பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த வைத்தவர்கள் அவரை விடாமல் விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
அடுத்த கட்டுரையில்
முத்தரப்பு டி20 போட்டி : இந்தியா- இலங்கை இன்று பலப்பரிட்சை