வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (11:36 IST)

பயமா? எனக்கா? ஜெ.வை எதிர்த்து அப்போதே குரல் கொடுத்தேன் - ரஜினி அதிரடி

ஜெயலலிதா மீது கொண்ட பயம் காரணமாகத்தான் இத்தனை வருடங்களாக அரசியலுக்கு வரவில்லை என்ற விமர்சனத்திற்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சந்திப்பு, மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமிப்பது என வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
 
அந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற கேள்வி பலராலும், குறிப்பாக அதிமுகவினரால் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில்தான், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை ரஜினிகாந்த் நேற்று மாலை திறந்து வைத்தார். அப்போது, இதுபற்றி பேசிய ரஜினிகாந்த்,  ஜெ. இருக்கும் போது நான் ஏன் வரவில்லை? பயமா எனக் கேட்கிறார்கள். 1996ம் ஆண்டு என்ன நடந்தது என மீண்டும் நான் நினைவு படுத்த விரும்பவில்லை. அப்போதே ஜெ.வை எதிர்த்து நான் குரல் கொடுத்தேன். எனக்கு யார் மீதும் பயமில்லை எனக் கூறினார். இதன் மூலம் இந்த விவகாரத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.