ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது; விவேக் கருத்து

Last Updated: செவ்வாய், 6 மார்ச் 2018 (22:22 IST)
நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பேசினார். அதில் அவரின் பேச்சு  ஒட்டுமொத்த தமிழ் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்து கூடி  இருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். 
இந்நிலையில் நடிகர் விவேக் இதுபற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ்  மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறது, மிகவும் வெளிப்படையாக, உண்மையாக பேசியிருந்தார். ரஜினி அவர்களின் பேச்சு உண்மையாக இருந்தது. இருப்பினும்  அதிமுக, திமுக எனும் இரு இமயங்கள் எதிரில். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்! இவ்வாறு விவேக் பதிவு செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :