திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:16 IST)

வைரமுத்துவை தூங்க விடக்கூடாது: திடீரென கூவும் ஹெச்.ராஜா

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வைரமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
 
சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டிற்கு பதிலளித்த வைரமுத்து அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மையைக் காலம் சொல்லும் என கூறியிருந்தார். ஆனால் சின்மயி விடாமல் வைரமுத்து மீது குற்றம் சாட்டினார்.
 
இதனையடுத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்ட வைரமுத்து, என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று அதிரடியாக தெரிவித்தார்.
 
இந்நிலையில் அவதூறு வழக்கில் சிக்கி இதுநாள் வரை எதையும் பேசாமல் மௌனமாக இருந்த ஹெச்.ராஜா நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு தன் வேலையை மீண்டும் துவங்கிவிட்டார்.
 
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எச்.ராஜா, வைரமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், என் தாய் ஆண்டாளை விமர்சித்த வைரமுத்து நிம்மதியாக தூங்க முடியாது எனவும் காட்டமாக பேசினார்.