செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (13:27 IST)

சுசிந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான கதையில் பாரதிராஜா-சசிக்குமார்!

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சுசீந்திரன்.இவர் ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
இயக்குனர் சுசீந்திரன், மகளிர் கபடியை மையமாக வைத்து 'கென்னடி கிளப்'  என்ற புதிய படத்தை இயக்க  உள்ளார், இதில் பாரதிராஜாவும் சசிக்குமாரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இயக்குனர்
சுசீந்திரனின் தந்தை 40 வருடமாக  கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர்.
 
இந்நிலையில்  இந்த படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் பலர் நடிக்கிறார்கள்.பழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம்,  வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.