திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (12:32 IST)

கேள்வி கேட்கும் துணிவு இருக்கா உமக்கு? கமலை சீண்டும் எச்.ராஜா

கேரளாவில் உள்ள சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அமல்படுத்த கேரள அரசு முயற்சித்து வருவதை எதிர்த்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதில் பாஜகவும் ஒன்று. 
 
குறிப்பாக முதல் அமைச்சர் பினராயி விஜயன் இந்துக்களை மதிக்கவில்லை என விமர்சித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை குறைகூற கூடாது என தனது கருத்தை தெரிவித்திருந்தார். 
 
இதர்கு பதிலடி தரும் விதமாக எச்.ராஜ டிவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், சபரிமலையை பொறுத்தவரை கேரள அரசை குறை சொல்ல கூடாதாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். 
அப்படியானால் 2017 ஆம் ஆண்டு பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே என பதிவிட்டுள்ளார்.