வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (11:02 IST)

எச்.ஐ.வி பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் அந்த குழந்தை தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தரப்பட்டு வருவதாகவும், இருப்பினும் 45 நாட்களுக்கு பின்னரே குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து எச்.ஐ.வி பரவியுள்ளதா? என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைக்கு தற்போதைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.