திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:25 IST)

ரஜினியுடன் கமல் கூட்டணியா? பிக்பாஸ் கட்டிபிடி வைத்தியரின் கணிப்பு என்ன?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்விக்கு பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளர் சினேகன் பதில் அளித்துள்ளார். 
 
கமல்ஹாசன் இந்தியன் 2 படம்தான் தன்னுடைய கடைசி படம் என்றும் இனி அரசியல் ஆயுதத்தை கையில் எடுத்து மக்களது தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என கூறியிருந்தார். 
 
மேலும், வரும் நாடளுமன்ற தேர்தலில் மக்கள் நிதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் தானும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், கூட்டணிகள் குறித்த அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளிவரும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
ஆனால், பொரும்பாலும் திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்வி கமல் ரஜினி கூட்டணி அமைப்பார்களா என்பதுதான். தற்போது இந்த கேள்விக்கு சினேகன் பதில் அளித்துள்ளார். சினேகன் கூறியது பின்வருமாறு,
 
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து மக்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். மேலும் பல கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
 
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பதை கமல் முடிவு செய்து முறைப்படி அறிவிப்பார். 
 
கொள்கை இல்லாத கட்சிகளுடன் கமல் ஒருபோதும் ஒன்றிணைய மாட்டார். ரஜினிகாந்துடன் கமல் இணைவாரா என்பது குறித்து காலம்தான் முடிவு செய்யும் என நாசூக்காக பதில் அளித்தார்.