ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 18 டிசம்பர் 2018 (17:19 IST)

சோனியாவை அவசியம் கூப்பிடனுமா...? ஸ்டாலினை விமர்சித்த எச்.ராஜா

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து எச்.ராஜா தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 
 
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது பேசிய ஸ்டாலின், பாசிச பாஜக ஆட்சியை ஒழித்து, ராகுல் காந்தியை பிரதமராக்குவேன் என கூறினார். காங்கிரஸ் - திமுகவிடையே விரிசல் உள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலின் இவ்வாறு கூறியது எதிர்கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
ஸ்டாலின் இவ்வாறு கூறியது தேசிய அரசியலில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது வடமாநிலங்களில் இதுதான் ஹாட் டாப்பிக். ஸ்டாலினின் இந்த முடிவை திமுக கூட்டணி கட்சிகள் சிலர் முன்மொழிந்தாலும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் பற்றி பேசியதை மக்கள் யாருமே ரசிக்கவில்லை. 
 
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து 25,000 தமிழ் விதவைகள் உருவாக காரணமான சோனியா காந்தியை இந்த விழாவுக்கு கூப்பிடலாமா? அவரை அழைத்தது பெரிய தவறு என குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், கடந்த 2 வருஷமாகவே ஸ்டாலின் உண்மைக்கு மாறாக எதை எதையோ பேசி வருகிறார். அவர் முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார் என்று விமர்சித்துள்ளார்.