திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (09:37 IST)

கோயில்களை நாசமாக்கியதே இவங்கதான்! – திமுகவை சாடும் எச்.ராஜா!

தமிழக கோவில்களை மத்திய அரசு அபகரிக்க நினைப்பதாக திமுகவினர் பேசியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எச்.ராஜா

தமிழகத்தில் உள்ள மிக பழமையான கோவில்கள் மற்றும் புராதாண சின்னங்களை மத்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக கூறியுள்ள திக மற்றும் திமுகவினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை விடுத்துள்ளார். தி.க தலைவர் வீரமணி மற்றும் மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் ”தமிழக கோவில்களை மத்திய அரசு அபகரிக்க முயன்றால் போராட்டம் நடத்துவோம்” என கூறியுள்ளனர்.

இவர்களின் கண்டனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாநில பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா “தமிழகத்தில் உள்ள கோயில்கள் விலை மதிப்பற்ற கலை பொக்கிஷங்கள் நமது முன்னோர்கள் மன்னர்களெல்லாம் கட்டி பாதுகாத்த கோயில்கள் அதன் சொத்துக்களையெல்லாம் நாசமாக்கியது திக, திமுக கும்பல்” என்று கூறியுள்ளார்.

இதற்கு திமுக மற்றும் திகவினர் எதிர்ப்பு தெரிவித்து அவரது ட்விட்டரில் பதில் அளித்துள்ளனர்.