1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (19:46 IST)

யோகிபாபுவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? வைரலாகும் திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் இன்று பிசியாக இருக்கும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருவது மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். யோகி பாபு நடித்த தர்ம பிரபு, கூர்கா உள்பட ஒருசில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் யோகிபாபுவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவரது வீட்டில் அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனை பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூட தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் திடீரென நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் ஒரு பெண்ணுடன் யோகிபாபு திருமண கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
இதனை அடுத்து இது குறித்து விளக்கமளித்த நடிகர் யோகிபாபு ’தனது திருமணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அது வெறும் வதந்தி என்றும் தனது திருமணம் முடிவானதும் முறைப்படி அனைவருக்கும் அறிவிபதாகவும் கூறியுள்ளார்