1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gurumoorthy says Rajinikanth can only save Tamil Nadu

தமிழகத்தை உருபடியாக்க ரஜினிதான் வரனும்: கொளுத்தி போட்ட துக்ளக் குருமூர்த்தி!

தமிழகம்
தமிழ்நாட்டை உருப்படியாக்க ரஜினி தான் முதலமைச்சராக வரவேண்டும் என சொல்லாமல் சொல்லியுள்ளார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. 
 
ரஜினி கட்சி துவங்குகிறார் தேர்தலில் போட்டியிட உள்ளார் என சில வருடங்களாக செய்திகள் மட்டுமே செவிகளில் விழுந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அரசியல் திட்டங்களையும், தன் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதையும் தனது ரசிகர்கள் இதை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என கூறியிருந்தார். 
 
இந்த முடிவிற்கு பலரும் பலவித கருத்துக்களை கூறி வந்தனர். இதேபோல  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும், ரஜினி தனது முடிவ மறு சிந்தனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று வெளியான துக்ளக் பத்திரிக்கையில் வாசகர் ஒருவர், ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் மட்டும் கூறுவது எதை காட்டுகிறது? என கேட்டுள்ளார். 
 
இதற்கு குருமூர்த்தி, ”தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது” என பதிலளித்துள்ளார். அதாவது ரஜினி முதல்வர் பதவி குறித்து மறு சிந்தனை செய்யும் பட்சத்தில் தமிழகம் உருப்பட வாய்ப்புள்ளது என மறைமுகமாக தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! – சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்!