தமிழகத்தில் உணவக செயல்பாடு குறித்த வழிகாட்டு முறை வெளியீடு!
தமிழகத்தில் உணவக செயல்பாடு குறித்த வழிகாட்டி முறையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன்படி அரசு வெளியிட்டுள்ள வழிகாடு முறைகள் ;
ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் .
கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களும் உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்களும் கட்டாயம் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு ஹோட்டல் வாசலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மேஜைக்கும் மற்றொரு மேஜைக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும் மேலும் கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும் என 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.