பான், குட்கா தடுப்பு நடவடிக்கை; 9 நிறுவனங்களுக்கு சீல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் குட்கா, பான் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் குட்கா பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. கடந்த மாதத்தில் மாநிலம் முழுவதும் பல டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “பான், குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் விநியோகத்தில் ஈடுபட்ட 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பான், குட்கா உள்ளிட்ட 491 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.