1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (19:40 IST)

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

Silambam
கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு வயதுடைய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர்.



ஸ்கூல் கேம்ஸ் ஆக்டிவிட்டி பவுண்டேஷன் சார்பில் கோவாவில் கடந்த மே 25 மற்றும் 26ம் தேதிகளில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து யுனைட்டெட் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் உள்ளிட்ட பல சிலம்ப பள்ளிகளில் இருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Silambam


பல கட்ட போட்டிகளில் சிறப்பாக சிலம்பம் விளையாடிய வீரர்கள், வீராங்கனைகள் 180 பதக்கங்களை குவித்ததுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர்.

Edit by Prasanth.K