திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 மே 2021 (16:31 IST)

தாத்தாவின் அறிவு, தந்தையின் உள்ளம்... உதயநிதிக்கு லிங்குசாமி பாராட்டு!

இயக்குநர் லிங்குசாமியின் கொரோனா மருத்துவமனையை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும், நடிகை கீர்த்தி சுரேஷும் திறந்து வைத்தனர்.

 
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பிரபலமான ஆசிரமத்தை 50 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 மருத்துவமனையாக மாற்றியுள்ளார் இயக்குநர் என்.லிங்குசாமி. இதனை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். 
 
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் லிங்குசாமி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தாமோ. அன்பரசன், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றுநோய் காலத்தில் உயிருக்கு அஞ்சாமல் பொதுமக்களுக்கு உதவி வரும் உதய், தனது தாத்தா கருணாநிதியின் அறிவையும், தந்தை மு.க.ஸ்டாலினின் உள்ளத்தையும் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.