1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 மே 2021 (17:13 IST)

சூர்யா பட இயக்குநர் ஆசிரம் திறந்தார்… பிரபலங்கள் பங்கேற்பு !

தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குந்ராக அறிமுகம் ஆனவர் லிங்குசாமி. இவர்  ரன், பீமா, பையா , அஞ்சான், சண்டக்கோழி, போன்ற கமர்சியல் வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவிற்கு வந்து  20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் கொரொனா நோயாளிகளுக்கு ஒரு ஆசிரம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இந்த திறப்பு விழாவில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ் போன்றோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து,  தன் புதிதாகத் திறந்த கொரொனா ஆசிரமத்தின் திறப்பு விழாவிற்கு வருகை வந்த நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷிற்கு தன் டுவிட்டர் பக்கத்தில் லிங்குசாமி நன்றி தெரிவித்துக்கொண்டார்.