வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (08:03 IST)

உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி, இந்த தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அரசுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது 
 
தேர்தல் தேதி விரைவில் வெளியிட தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த அரசாணை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன
 
இந்த அரசாணையின்படி செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது