1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:19 IST)

உள்ளாட்சி தேர்தல்…. அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தமிழக அரசியல் கட்சிகளோடு ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் வாக்காளார் பட்டியல் திருத்த பணி உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் தமிழக அரசியல் கட்சிகளோடு ஆலோசனை நடத்த உள்ளது. கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.